Monday, November 9, 2009

Top 10 Usefull Softwares

1. (Mozilla Firefox)
பலராலும் விரும்பப்படும், பயன்படுத்தப்படும் ஒரு ஓபன் சோர்ஸ் (Open Source) மென்பொருள் மொஸில்லா பயபொக்ஸ் எனும் இணைய உலாவி (வெப் பிரவுஸர்).. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி ப்யபொக்ஸ் 47.1% இணைய பாவனையாளர்களால் பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கிறது. அதே வேளை இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் 28 % பாவனையாளர்களாலேயே பயன்படுத்தபபடுவதாக் அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அத்துடன் 24 மணி நேரத்தில் (2008 ஜூன் மாதம் 17 ஆம் திக்தி) 8,002,530 இணைய பாவனையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பயபொக்ஸ் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
2. மொஸில்லா தண்டர்பர்ட் (Mozilla Thunderbird )
மொஸில்லா தண்டர்பர்ட் இமெயில்கள் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஓபன் சோர்ஸ் இமெயில் க்ளையண்ட். மென்பொருளாகும். பல்வேறு வசதிகளுடன் ஸ்பாம் எனும் குப்பை அஞ்சல்களை வடிகட்டுவதில் சிறப்பாகச் செயற்படுகிறது. தண்டர்பார்ட்.
3.ஓபன் ஆபிஸ் (Open Office)மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொகுப்பே ஓபன் ஒபிஸ். எம்.எஸ்.ஓபிஸில் போன்று Word Processing, Spreadsheet, Presentation, Graphics, Database மென்பொருள்களும் அடங்கியுள்ளன. இது ஏனைய ஒபிஸ் மென்பொருள்களுடன் ஒத்திசையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளtதால் இதன் மூலம் எம்.எஸ்.வர்ட்., எக்ஸல் பைல் வகைகளைக் கூட கையாளலாம்.
4. ஜிம்ப் (GIMP)அடோபி நிறுவனத்தின் (Photoshop) போட்டோசொப் போன்ற ஒளிப்படங்களைக் கையாளக் கூடிய ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளே ஜிம்ப். கிரபிக்ஸ் டிசைனிங் பயன்பாடில் உதவக் கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக ஜிம்ப் விளங்கிகிறது.. போட்டோசொப் கொண்டு உருவாக்கப்படும் PSD பைல்களையும் கூட இதன் மூலம் கையாள முடியும்.
5. பிட்ஜின் (Pidgin)இணைய உரையாடலில் பயன்படுத்தப்படும் ஓபன் சோஸ் மென்பொருளே பிட்ஜின். முன்னணியிலுள்ள Yahoo, MSN, GTalk, ICQ போன்ற உடனடி செய்தி (Instant Messenger) பரிமாற்றத்தில் பயன் படுத்தப்படும், மென்பொருள்களுடன் இது ஒத்திசையக் கூடியது. முன்னர் இது GAIM என்ப் பெயரிடப்பட்டிருந்தது,
6. வீ.எல்.சீ மீடியா ப்ளேயர் (VLC Media Player)ஒலி மற்றும் ஒளி வடிவிலானா பைல்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த ஓபன் சோர்ஸ் மீடியா ப்ளேயர் மென்பொருள்.. MPEG1, MPEG2, MPEG4, DivX, MP3, VCD, DVD, Audio CD, என ஏராளமானா ஓடியோ வீடியோ பைல் வகைகளை இதன் மூலம் கையாள் முடியும்.
7. க்ளேம்வின் (ClamWIN) இது விண்டோஸ் இயங்கு தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் ஓபன் சோஸ் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள். ஏனைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்க்ளைவிட கூடிய விகிதத்தில் வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களைக் கண்டறிகிறது. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுக்கு நிகராக் ஒழுங்கான கால இடைவெளியில் வைரஸ் ஸ்கேன் செய்தல், அதனை அப்டேட் செய்து கொள்ளல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ள்து.
8. 7-ஸிப் (7-Zip) வின்ஸிப், வின்ரார் போன்ற பைல் அளவினைச் சுருக்க வல்ல (File Ccompression) ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். வின்ஸிப் (WinZip) , மற்றும் வின்ராருடன் (WinRAR) ஒப்பிடும் போது இதன் பைல்களாச் சுருக்கும் விகிதம் மேம்பட்டதாயுள்ளது. அத்தோடு ஏரளமான பைல்களைச் சுருக்கும் மென்பொருள்களுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சம். எனலாம்.
9. பைல்ஸிலா (FileZilla)இது எந்த ஒரு இயங்கு தளத்திலும் இயங்கத் தக்க பைலக்ளை இணையம் வழியே பரிமாறக் கூடிய ஒரு FTP (File Transfer Protocol) மென்பொருள். விண்டோஸ் தளத்திற்கென உருவாக்க் பட்டிருக்கும் FTP மென்பொருள்களில் சிறந்ததாக பைல்ஸிலா கருதப்படுகிறது,
10. ஒடேசிட்டி (Audacity)ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருள். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது வர்ததக நோக்கில் உருவாக்கப்படும் ஒலிப்பதிவு செய்யக் கூடிய மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது

Moving copied conent to folder easily

எந்த ஒரு பைல் அல்லது போலடர் மீதும் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Copy To Folder மற்றும் Move To Folder எனும் கட்டளைகளை தோன்றச் செய்யலாம். அதன் மூலம் பைல், போல்டர்களை விரும்பிய இடத்திற்குப் இலகுவாகப் பிரதி செய்து கொள்ளவோ அல்லது நகர்த்த்வோ முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து (+) குறியீட்டில் க்ளிக் செய்து HKEY_CLASSES_ROOT என்பதை விரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு (+) குறியீட்டில் க்ளிக் செய்து AllFilesystemObjects → shellex → ContextMenuHandlers வரை விரித்துக் கொள்ளுங்கள். அடுத்து ContextMenuHandlers மேல் ரைட் க்ளிக் செய்து New → Key தெரிவு செய்யுங்கள்.
அப்போது போல்டர் அமைப்பில் ஒரு புதிய கீ தோன்றக் காணலாம். அதற்கு Copy To Folder என பெயரிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனைத் தெரிவு செய்து விண்டோவின் வலப் புறம் உள்ள default எனும் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து Modify தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் பெட்டியில் Value Data எனும் பகுதியில் {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} எனும் பெறுமானத்தை டைப் செய்து ஓகெ சொல்லி ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடி விடுங்கள்.
அவ்வளவு தான். இப்போது ஒரு பைல் அல்லது போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்ய Copy To Folder எனும் கட்டளையும் தோன்றக் காணலாம். இதே வழியிலேயே Move To Folder எனும் கட்டளையை உருவாக்கலாம். அதற்கு Move To Folder எனும் புதிய கீயை உருவாக்கி அதன் டிபோல்ட் பெறுமானமாக {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} என வழங்குங்கள்

How to Block a Drive......

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

Akbar Beerbal Stories

http://vrk-ramesh.blogspot.com/2009/11/blog-post_06.html

Vikramathithan kathaikal

http://http://vrk-ramesh.blogspot.com/2009/11/9.html